இன்றைய தகவல்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதமானது. தினமும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தபடுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது கைபேசியும் இணையதளமும். இவை இரண்டும் நம் தனிபட்ட வாழ்க்கை மற்றும் அலுவலகங்களில் தொடர்புகொள்ளும் முறையை தலைகீழாக புரட்டிவிட்டது. குறிப்பாக அலுவலகங்களில் சம்பிரதாயப்படியான (formal) தகவல் பரிமாற்றம் என்பது அடியோடு இல்லை.
இதில் வலைப்பதிவு (blog) என்பது இணையதளத்தின் ஓர் அற்புதமான துணைப்பொருள் (by-product). இத்தனை காலமாக எனக்கு பல வலைப்பதிவுகளில் மேய்ந்த, ரசித்த அனுபவம்தான் உள்ளது. அந்த அனுபவம் மற்றும் நண்பர்களின் தூண்டுதல் - நானும் இப்பொழுது ஓர் வலைப்பதிவாளன்! விபரீத முயற்சி!!
நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை, ரசித்ததை...... என அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். நான் நல்ல பதிவு என்று நினைப்பது உங்களுக்கு உளறலாக இருக்கலாம், ஆனாலும் பொறுத்து ஏற்றுகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்!
வலைப்பதிவுகள் வெகுதூரம் வந்துவிட்ட நிலையில் என்னுடைய இந்த தாமதமான முயற்சிக்கும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு என்னிடத்தில் இருக்கதான் செய்கிறது :)
ஆக, நன்பர்களே...அந்த ஓர் எதிர்பார்ப்புடன் என்னுடைய இந்த 'கல்வெட்டு குறிப்புக்கள்' ஆரம்பமாகின்றது!