Wednesday, July 30, 2014

Child Labor - Political & Social Failure


Wikipedia describes Child Labour as, employment of children in any work that deprives children of their childhood, interferes with their ability to attend regular school, and that is mentally, physically, socially or morally dangerous and harmful.

Poverty, limited access to free & compulsory education, inadequate laws and poor enforcement of the same, are cited as the major causes of child labour. Around the world the growing gap between the rich and the poor have forced children into child labour. Parts of Africa, Asia and Latin America are the worst affected by this phenomenon.

A lot has been discussed, debated and written on the subject. And that's not the discussion now!

Bolivia, a Latin American country has become the first nation globally to legalize child labour. It has reduced the legal age from 14 years to 10 years. The new law violates the ILO protocol on child labour. The Bolivian government says there are lot of safeguards against exploitation. But everyone knows it will be of little impact.

Perhaps Bolivia could not find a way to end child labour. The Bolivian government says it simply acknowledges the reality and has to live with it. 

Child right activists disagree. They say child labour is a short term solution. According to them, it is not poverty the cause of child labour but it is the other way around. Child labour leads to poverty in long run. 

It is too easy to get angry at Bolivia for taking such a regressive step. But it would be better to accept that we, and our political and development leaders, have collectively failed to address the political and social challenges. The problem of child labour is more a social and political phenomena than an economic one.

Statistics across the globe has shown that the number of working children has fallen directly proportionate to reduction of poverty however the same requires a social and political approach.

Sunday, July 27, 2014

உடைந்த ஜன்னல்

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு அற்புதமான வலைப்திவு ஒன்றினை பகிர்ந்தார். அந்த ஆங்கில பதிவின் தமிழ் சாரம், கீழே:

90-களில் நியுயார்க் மாநகரில் குற்றங்கள் எல்லை மீறி கொண்டிருந்தன. அப்போதைய மேயரும் நகர காவல்துறை ஆணையரும் அதனை கட்டுக்குள் கொண்டுவர நூதன யுத்தி ஒன்றினை கையாண்டனர். ‘உடைந்த ஜன்னல்’, அதன் பெயர். அதன் பலன், இன்று நியுயார்க் நகரம் அமெரிக்காவின் மிகவும் பாதுக்காப்பான நகரங்களில் ஒன்று!

சின்ன குற்றங்கள் பெரிய குற்றங்களுக்கு வழி வகுகின்றன என்ற ஒரு சாதாரண யூகத்தின் அடிப்படையில் அமையபெற்ற ஒரு யுத்தி.

அக்கம்பக்கத்தில் உள்ள உடைந்த ஜன்னல்கள் ஏதோ ஒன்றினை பறைசாற்றுகின்றன! ஆனால் அங்குள்ளவர்களும் சரி போலீசாரும் சரி அதனை பெரிதுபடுத்துவதில்லை. சிறு குற்றங்கள் கண்டுகொள்ளாத பட்சத்தில் பெரும் குற்றங்கள் நடைபெற தொடங்குகின்றன. போதை பொருள், கொலை என்று பட்டியல் நீளுகிறது.

மக்கள் குடிவர தயங்குகின்றனர், மளிகை மற்றும் சிறு கடைகள் மூடப்படுகின்றன, டாக்ஸிகள் உள்ளே வருவதில்லை. மெல்ல மெல்ல சம்மந்தப்பட்ட பகுதி குலைய தொடங்குகிறது.

இந்த புதிய முறையில் போலீசார் எந்த சிறிய குற்றத்தையும் உதாசீனப்படுத்துவதில்லை. பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளில் வரும் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சாதாரணமானவைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. நாளடைவில குற்றங்கள் மெல்ல குறைய தொடங்கி இன்று நியுயார்க் மாநகரம் ஒரு பாதுக்காப்பான நகரமாய் திகழ்கிறது.

இதில் இந்திய போலீசார் கற்க வேண்டியது நிறைய உள்ளது! அதைவிட, நம்மிடையே நிலவும் இனவெறியை இதனுடன் ஒப்பிடுவோமே!

இனவெறி, பாலியல் பாகுப்பாடு போன்றவை சிறிய அளவில் நடைபெறும் பொழுது நாம் வேறு பக்கம் திரும்பிகொள்கிறோம். சமூகதின் இந்த அக்கறையின்மைதான் பெரிய குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. 

ஒரு அமைச்சர் குடிபெயர்ந்த ஒருவரை அவமதிகிறார்; விளையாட்டு வீரர் ஒருவரின் தேசப்பற்று சந்தேகிக்கபடுகிறது; குடும்பத்தில் பெண்கள் அவமதிக்கபடுகின்றன; இவைதான் சமூகத்தின் ‘உடைந்த ஜன்னல்கள்’ 

நாம் கண்டுகொள்ளும் அளவிற்கு இது ஒரு பெரிய விவகாரம் அல்ல என்று நினைகிறோம். இது சரியான நிலைபாடு அல்ல.

ஒரு இனவெறியனின் சிறிய வெறுப்புணர்வு கண்டுகொள்ளாத பொழுது, அவன் அதனுடன் திருப்தி அடைவதில்லை. இன்னும் பெரிதாக ஏதோ ஒன்றினை செய்ய முயல்கிறான். எவரும் அவனை பெரிதுபடுத்தாதவரை இது இன்னும் பலரை தொற்றுகிறது. சீரழிவை நாம் உணரும் முன், மேலும் மேலும் பல வெறியர்கள் இதனை முயல்கின்றனர்! 

சமூகம் இரத்தமயமாவதை தடுக்க சிறிய எல்லை மீறல்களை ஆரம்பம் முதலே தடுக்கப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளப்படவேண்டும். இது மற்றவர்களை கட்டுப்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக சமூகம் இனவெறியை சகித்துகொள்வதற்க்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கபடும்! 

”உடைந்த ஜன்னல்’ யுத்தியில் நாம் கற்றுகொள்ளக்கூடிய ஒரு முக்கிய பாடம்.  


Saturday, July 12, 2014

ஆரவாரம்

நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வருடம்தோறும் நடைபெறும் சடங்குதான் என்றாலும் இந்த வருடம் சற்று அதிகமான ஆர்ப்பாட்டம். பட்ஜெட் பற்றிய கருத்துக்களும் அறிக்கைகளும் வழக்கம்போல் யார் எந்த பக்கம் என்பதை ஒத்தே சொல்லப்பட்டன. முப்பது நாட்களில் விலைவாசி கட்டுப்படுத்தப்படும், இந்திய நாணயத்தின் மதிப்பு நிலைநிறுத்தப்படும், வருமான வரியின் உச்சவரம்பு உயர்த்தப்படும், தேவையற்ற மான்யங்கள் நீக்கப்படும், நிதி பற்றாகுறை கட்டுக்குள் வரும், இப்படியாக மிகைபடுத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள். இந்த அதீத எதிர்பார்ப்புகளின் விளைவினால் அதே அளவிலான ஆர்ப்பாட்டமும். ஆனால், இவை எதற்கும் முறையான அறிவிப்புகள் இல்லை. கடந்த காலங்களில் மன்மோகன்சிங் அரசு செய்ததையே இந்த அரசும் சிறுசிறு மாற்றங்களுடன் செய்துள்ளது. பழைய கள் புதிய மொந்தையில், அவ்வளவே!



ஆனாலும் மீடியா செய்த ஆரவாரம்தான் தாங்க முடியவில்லை. நிதி அமைச்சர் வீட்டிலுருந்து புறப்படுகிறார், அலுவலகம் வந்துவிட்டார், பாராளுமன்றத்தை நெருங்கிவிட்டார், மஞ்சள் குருதா அனிந்துள்ளார்.....இப்படி செய்திகள். தொலைகாட்சி அரங்குகளில் பாராளுமன்றத்தைவிட அதிக கூச்சலுடன் கூடிய கலந்துரையாடல்கள். பிரதம மந்திரி, நிதி மந்திரி தொடங்கி சாமான்யன் வரை அனைவருக்கும் ஆலோசனைகள்! தொலகாட்சி அரங்குகளில் இந்த நிலை என்றால், பத்திரைகைகளும் தாங்களும் எந்த விததிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்தன. அவைகளும் தங்கள் பங்குக்கு இலவச ஆலோசனைகளை அள்ளி வழங்கின! விதவிதமான கிராஃபிக்ஸ் மூலம் அசத்தின. கால்பந்து உலகக்கோப்பை வெகுவாக கைகொடுத்தது.  

கல்யாணம், காதுகுத்து முதல் ரஜினி பட வெளியீடு வரை எதுவாயினும் ஆரவாரதிற்க்கு குறைவில்லாதவர்கள் நாம்! இந்த திறமை நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று!!

Saturday, July 5, 2014

உடற்பயிற்ச்சியும் இசையும்

காலை அல்லது மாலை என்று நேரம் கிடைக்கும் பொழுது அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அங்கு வரும் விதவிதமான மணிதர்களை வேடிக்கை பார்ப்பது மிகவும் சுவாரஸியமான ஒன்று! கதையளக்கும் பெண்கள், கடைசியாக படித்த/பார்த்த செய்தியை காரசாரமாக விவாதிப்போர், ஒய்வு பெற்ற முதியோர், ஒரே நாளில் உடல் எடையை பாதியாக குறைக்க முயல்வோர், எதைபற்றியும் கவலைபடாத குழந்தைகள், இப்படி பல! அங்கு நான் உடற்பயிற்சி செய்யும் நேரத்தைவிட இந்த பொழுதுபோக்குகளை வேடிக்கை பார்க்கும் நேரம்தான் அதிகம். இதில் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று காதில் ஹெட்ஃபோனை மாட்டிகொண்டு இசையை ரசித்து கொண்டே உடற்பயிற்ச்சி செய்யும் நபர்கள்! பொழுதுபோக்கு, மனதை ஒரு நிலைபடுத்துதல் என்று இதற்கு பல காரணங்கள் சொல்லபடுகின்றன! இதில் எது சரி என்று எனக்கு புலப்படவில்லை!!!
பின்குறிப்பு: சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவரும் எல்லோரையும் போல் ஹெட்ஃபோனுடன் நடந்து கொண்டிருந்தார். இசை என்றால் காத தூரம் ஓடும் நபர் அவர் என்பதுதான் இதில் விஷேசம்!