காலை அல்லது மாலை என்று நேரம் கிடைக்கும் பொழுது அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அங்கு வரும் விதவிதமான மணிதர்களை வேடிக்கை பார்ப்பது மிகவும் சுவாரஸியமான ஒன்று! கதையளக்கும் பெண்கள், கடைசியாக படித்த/பார்த்த செய்தியை காரசாரமாக விவாதிப்போர், ஒய்வு பெற்ற முதியோர், ஒரே நாளில் உடல் எடையை பாதியாக குறைக்க முயல்வோர், எதைபற்றியும் கவலைபடாத குழந்தைகள், இப்படி பல! அங்கு நான் உடற்பயிற்சி செய்யும் நேரத்தைவிட இந்த பொழுதுபோக்குகளை வேடிக்கை பார்க்கும் நேரம்தான் அதிகம். இதில் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று காதில் ஹெட்ஃபோனை மாட்டிகொண்டு இசையை ரசித்து கொண்டே உடற்பயிற்ச்சி செய்யும் நபர்கள்! பொழுதுபோக்கு, மனதை ஒரு நிலைபடுத்துதல் என்று இதற்கு பல காரணங்கள் சொல்லபடுகின்றன! இதில் எது சரி என்று எனக்கு புலப்படவில்லை!!!
பின்குறிப்பு: சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவரும் எல்லோரையும் போல் ஹெட்ஃபோனுடன் நடந்து கொண்டிருந்தார். இசை என்றால் காத தூரம் ஓடும் நபர் அவர் என்பதுதான் இதில் விஷேசம்!
No comments:
Post a Comment