சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு அற்புதமான வலைப்திவு
ஒன்றினை பகிர்ந்தார். அந்த ஆங்கில பதிவின் தமிழ் சாரம், கீழே:
90-களில் நியுயார்க் மாநகரில் குற்றங்கள் எல்லை
மீறி கொண்டிருந்தன. அப்போதைய மேயரும் நகர காவல்துறை ஆணையரும் அதனை கட்டுக்குள் கொண்டுவர
நூதன யுத்தி ஒன்றினை கையாண்டனர். ‘உடைந்த ஜன்னல்’, அதன் பெயர். அதன் பலன், இன்று நியுயார்க் நகரம்
அமெரிக்காவின் மிகவும் பாதுக்காப்பான நகரங்களில் ஒன்று!
சின்ன குற்றங்கள் பெரிய குற்றங்களுக்கு வழி வகுகின்றன
என்ற ஒரு சாதாரண யூகத்தின் அடிப்படையில் அமையபெற்ற ஒரு யுத்தி.
அக்கம்பக்கத்தில் உள்ள உடைந்த ஜன்னல்கள் ஏதோ ஒன்றினை
பறைசாற்றுகின்றன! ஆனால் அங்குள்ளவர்களும் சரி போலீசாரும் சரி அதனை பெரிதுபடுத்துவதில்லை.
சிறு குற்றங்கள் கண்டுகொள்ளாத பட்சத்தில் பெரும் குற்றங்கள் நடைபெற தொடங்குகின்றன.
போதை பொருள், கொலை என்று பட்டியல் நீளுகிறது.
மக்கள் குடிவர தயங்குகின்றனர், மளிகை மற்றும் சிறு
கடைகள் மூடப்படுகின்றன, டாக்ஸிகள் உள்ளே வருவதில்லை. மெல்ல மெல்ல சம்மந்தப்பட்ட பகுதி
குலைய தொடங்குகிறது.
இந்த புதிய முறையில் போலீசார் எந்த சிறிய குற்றத்தையும்
உதாசீனப்படுத்துவதில்லை. பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளில் வரும் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சாதாரணமானவைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. நாளடைவில குற்றங்கள் மெல்ல குறைய தொடங்கி இன்று நியுயார்க்
மாநகரம் ஒரு பாதுக்காப்பான நகரமாய் திகழ்கிறது.
இதில் இந்திய போலீசார் கற்க வேண்டியது நிறைய உள்ளது!
அதைவிட, நம்மிடையே நிலவும் இனவெறியை இதனுடன் ஒப்பிடுவோமே!
இனவெறி, பாலியல் பாகுப்பாடு போன்றவை சிறிய அளவில்
நடைபெறும் பொழுது நாம் வேறு பக்கம் திரும்பிகொள்கிறோம். சமூகதின் இந்த அக்கறையின்மைதான் பெரிய குற்றங்களுக்கு வழி வகுக்கிறது.
ஒரு அமைச்சர் குடிபெயர்ந்த ஒருவரை அவமதிகிறார்; விளையாட்டு வீரர் ஒருவரின் தேசப்பற்று சந்தேகிக்கபடுகிறது; குடும்பத்தில் பெண்கள் அவமதிக்கபடுகின்றன; இவைதான் சமூகத்தின் ‘உடைந்த ஜன்னல்கள்’
நாம் கண்டுகொள்ளும் அளவிற்கு இது ஒரு பெரிய விவகாரம் அல்ல என்று நினைகிறோம். இது சரியான நிலைபாடு அல்ல.
ஒரு அமைச்சர் குடிபெயர்ந்த ஒருவரை அவமதிகிறார்; விளையாட்டு வீரர் ஒருவரின் தேசப்பற்று சந்தேகிக்கபடுகிறது; குடும்பத்தில் பெண்கள் அவமதிக்கபடுகின்றன; இவைதான் சமூகத்தின் ‘உடைந்த ஜன்னல்கள்’
நாம் கண்டுகொள்ளும் அளவிற்கு இது ஒரு பெரிய விவகாரம் அல்ல என்று நினைகிறோம். இது சரியான நிலைபாடு அல்ல.
ஒரு இனவெறியனின் சிறிய வெறுப்புணர்வு கண்டுகொள்ளாத
பொழுது, அவன் அதனுடன் திருப்தி அடைவதில்லை. இன்னும் பெரிதாக ஏதோ ஒன்றினை செய்ய முயல்கிறான். எவரும் அவனை பெரிதுபடுத்தாதவரை இது இன்னும் பலரை தொற்றுகிறது. சீரழிவை நாம் உணரும் முன், மேலும்
மேலும் பல வெறியர்கள் இதனை முயல்கின்றனர்!
சமூகம் இரத்தமயமாவதை தடுக்க சிறிய எல்லை மீறல்களை
ஆரம்பம் முதலே தடுக்கப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளப்படவேண்டும். இது மற்றவர்களை கட்டுப்படுத்தும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமூகம் இனவெறியை சகித்துகொள்வதற்க்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கபடும்!
”உடைந்த ஜன்னல்’ யுத்தியில் நாம் கற்றுகொள்ளக்கூடிய
ஒரு முக்கிய பாடம்.
No comments:
Post a Comment