Saturday, July 12, 2014

ஆரவாரம்

நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வருடம்தோறும் நடைபெறும் சடங்குதான் என்றாலும் இந்த வருடம் சற்று அதிகமான ஆர்ப்பாட்டம். பட்ஜெட் பற்றிய கருத்துக்களும் அறிக்கைகளும் வழக்கம்போல் யார் எந்த பக்கம் என்பதை ஒத்தே சொல்லப்பட்டன. முப்பது நாட்களில் விலைவாசி கட்டுப்படுத்தப்படும், இந்திய நாணயத்தின் மதிப்பு நிலைநிறுத்தப்படும், வருமான வரியின் உச்சவரம்பு உயர்த்தப்படும், தேவையற்ற மான்யங்கள் நீக்கப்படும், நிதி பற்றாகுறை கட்டுக்குள் வரும், இப்படியாக மிகைபடுத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள். இந்த அதீத எதிர்பார்ப்புகளின் விளைவினால் அதே அளவிலான ஆர்ப்பாட்டமும். ஆனால், இவை எதற்கும் முறையான அறிவிப்புகள் இல்லை. கடந்த காலங்களில் மன்மோகன்சிங் அரசு செய்ததையே இந்த அரசும் சிறுசிறு மாற்றங்களுடன் செய்துள்ளது. பழைய கள் புதிய மொந்தையில், அவ்வளவே!



ஆனாலும் மீடியா செய்த ஆரவாரம்தான் தாங்க முடியவில்லை. நிதி அமைச்சர் வீட்டிலுருந்து புறப்படுகிறார், அலுவலகம் வந்துவிட்டார், பாராளுமன்றத்தை நெருங்கிவிட்டார், மஞ்சள் குருதா அனிந்துள்ளார்.....இப்படி செய்திகள். தொலைகாட்சி அரங்குகளில் பாராளுமன்றத்தைவிட அதிக கூச்சலுடன் கூடிய கலந்துரையாடல்கள். பிரதம மந்திரி, நிதி மந்திரி தொடங்கி சாமான்யன் வரை அனைவருக்கும் ஆலோசனைகள்! தொலகாட்சி அரங்குகளில் இந்த நிலை என்றால், பத்திரைகைகளும் தாங்களும் எந்த விததிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்தன. அவைகளும் தங்கள் பங்குக்கு இலவச ஆலோசனைகளை அள்ளி வழங்கின! விதவிதமான கிராஃபிக்ஸ் மூலம் அசத்தின. கால்பந்து உலகக்கோப்பை வெகுவாக கைகொடுத்தது.  

கல்யாணம், காதுகுத்து முதல் ரஜினி பட வெளியீடு வரை எதுவாயினும் ஆரவாரதிற்க்கு குறைவில்லாதவர்கள் நாம்! இந்த திறமை நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று!!

No comments:

Post a Comment