Monday, May 26, 2014

பங்காளி சண்டை

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிபெண்கள் பிரம்பிப்பூட்டுகின்றன. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 450-க்கும் அதிகம். தேர்ச்சி விகிதம் சுமார் 90 சதவிதம். இது ஒருபுறம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும், தமிழகத்தில் கல்வி மேலாண்மை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது. ”இதே நிலை நீடித்தால் அனைவரும் 500க்கு 500 பெற்றாலும் ஆச்சரியமில்லை. திறமையான மாணவர்களை குலுக்கல் முறையில் தான் தேர்தெடுக்க வேண்டும்” என்று கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழகத்தைவிட தேர்ச்சி விகிதம் குறைவாகவுள்ள கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் மாணவர்கள் அகில இந்திய அளவிலான தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் தமிழக மாணவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வுகள், ஐஏஎஸ்., போன்ற தேர்வுகளில் சாதிப்பது இல்லை! குறைபாடுகள் நிறைந்த பாடதிட்டம், எளிதான கேள்விதாள்கள், மதிப்பெண்களை அள்ளி வழங்குதல், இப்படி பல காரணங்கள் தமிழகத்தின் கல்வி தரத்தை கேள்விகுறியாக்குகின்றன என்பது ஒரு வாதம். அது சரியே. ஆனால், இந்த நிலைக்கு என்ன காரணம்? வருடம்தோறும் அதிகரிக்கும் தேர்ச்சி விகிதம் அரசின் சாதனையாக பறைசாற்றப்படுகிறது. ஆட்சியாளர்கள் தங்களது சாதனை பட்டியளுக்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்கள், அவ்வளவே.  

o0O0o

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின், இரு மாநிலங்கள் இடையே நடைபெறும் ”பாகபிரிவினை” பங்காளி சண்டையினை போல் உள்ளது. முன்னால் ஆந்திர அரசின் சொத்துகள், கடன்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அசாத்தியமான பணியினை  இதற்க்கென அமைக்கபட்ட கமிட்டிகள் திறம்பட நிறைவேற்றியுள்ளன. அரசு ஊழியர்கள் விவகாரத்தில், சீமந்தரா பகுதியில் பிறந்த மற்றும் படித்த ஊழியர்கள் ஆந்திர மாநிலத்திலும் தெலுங்கானா பகுதியில் பிறந்த மற்றும் படித்த ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்திலும் பணிபுரிய வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், சீமந்திராவினர் சிலர் தங்கள் சொந்த செளகரியதிற்காக தெலுங்கானாவில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு, தெலுங்கானாவிற்க்காக போராடியவரும் தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்வருமான சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த அரசியலுக்கு தெலுங்கானாவிலும் ஆதரவு. காவிரிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணை அல்லது மும்பையில் வேற்று மாநிலத்தினருக்கான எதிர்ப்பு போன்ற விவகாரங்கள் ஏதோ புரிகிறது. ஆனால், ஒரே தாய்மொழியை பேசிக்கொண்டு இவ்வளவு காலமாக தங்களை ஒரு மாநிலத்தினராக அடையாளப்ப்டுத்தி கொண்டிருந்த இவர்களிடையே இப்படியொறு குரோதத்தை எப்படி விதைக்க முடிந்தது? புரியவில்லை!!!  

Friday, May 23, 2014

ஃபைவ் ஸ்டார் பள்ளிகள்

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் மான்யம் மற்றும் இலவசம் ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரம். படித்த நடுத்தர வர்க்கத்தின் பங்கு இதில் அதிகம். தேர்தலை மனதில் கொண்டு இலவசங்கள் அறிவிக்கபடுகின்றன என்பது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் அனைத்தையும் இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது. வளரும் நாடுகளில் அடிதட்டு மக்களுக்கு சில சலுகைகள் அவசியம். இங்கு அது சரியானவர்களை சென்றடைகிறதா என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். வளர்ந்த நாடுகளில்கூட மான்யங்கள் நடைமுறையில் உள்ளன. அடிப்படை கல்வி மற்றும் மருத்துவம் சிறந்த உதாரணங்கள். பெரும்பாலான நாடுகள் இன்றும் இவையிரண்டையும் இலவசமாகவும் தரமாகவும் வழங்குகின்றன. நம்மிடம் பின் தங்கியுள்ள மனிதவள மேம்பாட்டு தேவைகள் ஏராளம். அவை அனைத்தும் எல்லா தரப்பு மக்களையும் சரியான முறையில் சென்றடைவதற்கான வழிமுறைகளை நாம் ஆராய வேண்டும். அது சரி, சமையல் எரி வாயு மற்றும் டீசல் போன்றவற்றிற்க்கான மான்யம் நீக்கப்பட்டு முழு விலையும் கொடுக்க தயார் என்று இதே சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரம் செய்தால் என்ன?

o0O0o

பள்ளிகளில் அட்மிஷன் சீசன் தொடங்கிவிட்டது. பெற்றோர் ஒரு பக்கம் பள்ளிகளின் தரத்தினை ஆராய்ந்து அலைந்து கொண்டிருகின்றனர். மற்றோரு பக்கம் பள்ளிகள் தங்கள் தனிதன்மையை பறைசாற்றி ‘பிள்ளைப்பிடிக்கும்’ மகத்தான பணியை செவ்வன செய்துகொண்டிருகின்றன. ‘பல ஏக்கர் வளாகம், குளிருட்டப்பட்ட வகுப்பறைகள், நவீன சாதனங்கள், சர்வதேச கல்விமுறை, பன்னாட்டு உணவு’ - இப்படி நீண்ட பட்டியல். இப்படிப்பட்ட பள்ளிகளை ’தி இந்து’ நாளிதழில் ஒரு கட்டுரையாசிரியர் ’ஃபைவ் ஸ்டார் பள்ளிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இதனை அவசியமாக்குகிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் வெறும் கட்டிடங்களும் கருவிகளும் நல்ல கல்வியை தராது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ‘ஃபைவ் ஸ்டார்’ வசதிகள் வளரும் குழந்தைகளிடம் நல்ல பண்புகளை உறுதி செய்யுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. 

Thursday, May 22, 2014

Right To Education

With the vacations over the education season has started. More than the admissions to higher education its the school admission that is causing much anxiety to parents, as usual.

The so called elite institutions are refusing to issue applications under the RTE quota or doing so just for namesake.  Now that's not the issue. Why the same is neither highlighted nor debated? No one seems to be concerned - government, political parties, media, community and finally the school managements!

The media, particularly the electronic media, has its other priorities driven by more vital commercial considerations; The middle class looks the other way and it will make noise if there is quota for subsidized LPG; In fact, some are even arguing against RTE; No social activist sits at Raj Ghat.

The same has not been made an issue at the recently concluded elections by none of the major political parties. Neither the opposition nor the government looked into this. Their priorities lie elsewhere.

Mr.Obama won his first presidential elections on a single point agenda - reforming the American healthcare system. The focus was on providing more Americans with access to affordable health insurance, improving the quality of healthcare and ultimately reducing healthcare spending at US. Debates, discussions, wide media coverage, opinion surveys - it roused the American community. While religion, caste or language has so much impact on us why not the same with such livelihood issues?   Maybe, we are either more emotive or irrational.