ஒரு தலைவைரை பற்றியோ அல்லது அவரின் கருத்துக்களை பற்றியோ பலவித கருத்துக்கள் இருப்பது சகஜம். ஆனால் அவரை மகாத்மா என்று அழைப்பதே தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.
அதற்கு அரசியல்ரீதியான காரணங்கள் முன் வைக்கபடுகிறது! இங்குதான் முரண்பாடே.
அரசியல் செயல்பாடுகள் என்று வரும்பொழுது எந்த தலைவரும் எந்நேரமும் எல்லோரையும் திருப்திப்படும்படியான முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவருடன் அரசியலில் முரண்பட்டவர்கள் ஏராளம். அவரும் பல நேரங்களில் தவறான அரசியல் நிலைபாடினை எடுத்துள்ளார். ஆனால் ஒர் நேர்மையான அரசியலுக்கு முயற்ச்சித்தார்.
மகாத்மா என்று அவர் போற்றப்பட்டதற்கு அவரின் நேர்மையான அரசியல் வாழ்க்கை எப்படி ஒரு முக்கியமான காரணமோ அதைப்போல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிக முக்கிய காரணம். ஒழுக்கமான வாழ்வினை வாழ அவர் எடுத்த சிரத்தைகள் மற்றும் ஒளிவு மறைவு இல்லாத உண்மையான தனி மணித வாழ்க்கைத்தான் எல்லோராலும் அவர் மகாத்மா என்று போற்றப்பட்டதற்கு முக்கிய காரணம்.
இன்று ட்வீட்டரில் பார்த்தது - காந்தி சாமான்ய மக்களின் கதாநாயகன். ஆம் அறிவுஜீவிகளால் பலமாக விமர்சனம் செய்யப்பட்டபோதிலும் சாமான்யர்களுக்கு அவர் கதாநாயகன்தான்.
No comments:
Post a Comment